மும்பை

சகோதரருக்கு எதிராக சாட்சியம் அளித்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ராணுவ வீரர் கைது

சகோதரருக்கு எதிராக சாட்சியம் அளித்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

நாக்பூர், 

சகோதரருக்கு எதிராக சாட்சியம் அளித்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

சகோதரருக்கு எதிராக சாட்சியம்

நாக்பூர் மாவட்டம் நார்கெட் தாலுகா பெலோனா கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்லால். இவரது சகோதரர் பரத் காலம்பே (வயது30). ராணுவ வீரரான இவர் காஷ்மீர் மாநிலம் லடாக்கில் பணியாற்றி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு கிராமத்தை சேர்ந்த சிறுமியை கற்பழித்ததாக பிரேம்லாலை போலீசார் கைது செய்தனர்.

இவருக்கு எதிராக கேசவ் மாஸ்கே (52) என்பவர் கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். இது பற்றி அறிந்த ராணுவ வீரர் பரத் காலம்பே விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்தார். தனது சகோதரர் பிரேம்லாலுக்கு எதிராக சாட்சியம் அளித்த கேசவ் மாஸ்கே மீது முன்விரோதம் கொண்டார்.

துப்பாக்கியால் சுட்டுக்கொலை

கடந்த 12-ந்தேதி மாலை கேசவ் மாஸ்கே தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை கவனித்த ராணுவ வீரர் பரத் காலம்பே தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். இதில் அவர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார் நேற்று முன்தினம் ராணுவ வீரர் பரத் காலம்பேவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு