தேர்தல் 2026

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக மனு

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக மனு அளித்துள்ளது.

கோவை,

கோவை நகரில் பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் தலைமையில் அ.தி.மு.க.வினர், வக்கீல் அணியினர், கோவை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள தேர்தல் பொதுபார்வையாளர் பிரதாப்சிங்கை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அதில் கோவை தெற்கு தொகுதியில் கரூரை சேர்ந்தவர்கள் வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாகவும், பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று அச்சுறுத்துகின்றனர்.

இது போன்ற தேர்தல் விதிமுறை மீறல் தொகுதி முழுவதும் நடைபெறுவதால் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்து இருந்தனர். இதேபோல் தனிநபர்கள் சார்பில், தலைமை தேர்தல் கமிஷனருக்கும் ஏராளமானவர்கள் பணபட்டுவாடா தொடர்பாக புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர்.