தேர்தல் 2026

மு.க.ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் அ.தி.மு.க.

அ.தி.மு.க. இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலில் சென்னையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26. பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.

முன்னதாக அ.தி.மு.க. இதுவரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டிருந்தநிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 17 பேர் கொண்ட இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

இதன்படி 3ம் கட்டமாக வெளியிட்டப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் சென்னையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் உள்பட, 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் விவரம்:-

1.ஆயிரம் விளக்கு - பா.வளர்மதி

2.அண்ணாநகர் - கோகுல இந்திரா

3.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி- ஆதி ராஜாராம்

4.திட்டக்குடி (தனி) - முருகுமாறன்

5.துறைமுகம் - ராயபுரம் ஆர்.மனோ

6.விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி

7.தியாகராயநகர் - சத்தியநாராயணன்

8.வேளச்சேரி - எம்.கே.அசோக்

9.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்

10.ஆர்.கே.நகர் - ஆர்.எஸ். ராஜேஷ்

11.வில்லிவாக்கம் - எஸ்.ஆர்.விஜயகுமார்

12.திருச்சுழி - ராஜவர்மன்

13.ஆலந்தூர் - எஸ்.சரவணன்

14.கொளத்தூர் - பி.சந்தான கிருஷ்ணன்

15.திரு.வி.க நகர் (தனி) - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

16. எழும்பூர் (தனி) - அபிஷேக் ரங்கசாமி

17.ஆலங்குடி - தன.விமல்

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகளில் களமிறங்கும் அ.தி.மு.க.

அ.தி.மு.க. வெளியிட்டுள்ள இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து சந்தான கிருஷ்ணனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து ஆதிராஜராமும் போட்டியிட உள்ளனர்.

கடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூரில் எதிர்கொண்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஆதி ராஜாராமை, இம்முறை சேப்பாக்கத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே 2006ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு 2,468 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார். அதே நேரம் கடந்த 2021 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கிய இவர், 35,138 வாக்குகளை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது