சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. முதல்-அமைச்சர், மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், சீமான் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்தநிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது இவற்றை வெளியிட தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் நாளை காலை சென்னை வருகிறார்.