தேர்தல் 2026

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக குடும்பத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பு

வானதி சீனிவாசனின் மகன்கள் இளைஞர்களுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை,

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், மருத்துவ சிகிச்சைக்குப் பின் இன்று வீடு திரும்பும் நிலையில், அவருக்காக அவரது குடும்பத்தினர் தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், தொகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட மக்கள் பணிகளை விளக்கி தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

அதேபோல், வானதி சீனிவாசனின் மகன்களான ஆதர்ஷ் மற்றும் கைலாஷ் ஆகியோர் இளைஞர்களுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வானதி சீனிவாசன் விரைவில் குணமாகி மக்கள் பணியை தொடர்வார் என அவரது குடும்பத்தினர் தொகுதி மக்களிடம் உறுதி அளித்து வருகின்றனர்.