தேர்தல் 2026

“வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி அல்ல..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தீர்க்கமான மக்கள் ஆணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று தமிழ்நாட்டில், ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் நமது திராவிடமாதிரி திட்டங்களின் பயனாளிகளில் குறைந்தபட்சம் ஒருவர் இருக்கிறார்.

மாநிலம் முழுவதும், வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, அது களத்திலும் காணப்படுகிறது.

2026-ஆம் ஆண்டின் தீர்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. திமுக தீர்க்கமான மக்கள் ஆணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.