சென்னை,
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்த நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
”கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்" 16-03-2026 திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் "கலைஞர் அரங்கில்" நடைபெறும். அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். பொருள் : 2026 சட்டப்பேரவைத் தேர்தல்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.