தேர்தல் 2026

எங்கள் ஒட்டு உங்களுக்கு வேண்டாமா? வேட்பாளாரிடம் கேள்விகளால் துளைத்த மக்கள்..

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியின் திமுக வேட்பாளர் பூமலர் வலையப்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார்.

நாமக்கல்,

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமியின் மகள் பூமலர்க்கு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவின் வேட்பாளர் பூமலர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது தனது தொகுதிக்கு உட்பட்ட மோகனூரை அடுத்த உள்ள வலையப்பட்டி பகுதியில் ஓட்டு கேட்க சென்றார்.

மேலும் வாக்காளர்களை சந்தித்து அவர்களிடம் வாக்கு கேட்டு கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினரும் கூடினர். பின்னர் தங்களது கடும் போராட்டம் மற்றும் பிரச்சினை குறித்து அதற்கு ஒரு முடிவு கூறுமாறும் தெரிவித்தனர்.

நாங்கள் ஒட்டு கேட்கதான் வந்துள்ளோம் வேறு எதுவும் பேச வேண்டாம் என திமுகவினர் கூறியதால் விவாசாயிகள் கோபமடைந்தனர். அப்போது எங்கள் ஒட்டு உங்களுக்கு வேண்டாமா என திமுக வேட்பாளரிடம் அப்பகுதி மக்கள் கேள்விகளால் துளைத்தனர்.

இதனால் திமுகவினர்களுக்கும் விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் முற்றியது. இதில் மோகனூர் ஒன்றிய கழக செயலாளர் நாங்கள் அரசங்கத்திற்கு சொந்தமான கோவில் நிலத்தில் கூட்டம் நடத்துகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் விவசாயிகளை பார்த்து உங்களை யார் இங்கு வர சொன்னது என கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

சமுக ஆர்வலர்கள் ஒரு தரப்பினர், இந்து அறநிலை துறை கட்டுபாட்டில் உள்ள கோவிலில் அரசியல் சம்மந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது. அதை மீறி திமுகவினர் நடத்தியதால் அதை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்த தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தொடர்ப்பு கொள்ள முயற்சி செய்தனர் ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து வேட்பாளர் பூமலர் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.