தேர்தல் 2026

ஒரே விமானத்தில் பயணிக்கும் இபிஎஸ் - உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் களத்தில் கடுமையான வார்த்தை போரில் இபிஎஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

தேர்தல் களத்தில் கடுமையான வார்த்தை போரில் இபிஎஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடியாரை புகைப்படங்களை காட்டி உதயநிதி கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதற்கு இபிஎஸ்-ம் பதிலடியாக இன்ஸ்டா புகைப்படங்களை காட்டி பேசி வருகிறார்.

இந்நிலையில் இன்று நண்பகல் சென்னையில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே விமானத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு செல்கின்றனர். திருச்சியில் இருந்து தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பிரசாரத்திற்கு செல்வதற்காக எடப்பாடி பழனிசாமி செல்கிறார். உதயநிதிஸ்டாலின் திருச்சியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இருவரும் ஒரே நேரத்தில் விமானநிலையைத்திற்கு வந்து ஒன்றாக பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒருவரையொருவர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த சந்திப்பு எப்படியிருக்கும். வார்த்தை போரில் இருவரும் கடுமையாக தாக்கி பேசி வரும் நிலையில் ஒன்றாக பயணிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.