தேர்தல் 2026

நல்லாட்சி அமையட்டும்... தவெக தலைவர் விஜய்க்கு ப.சிதம்பரம் வாழ்த்து

த.வெ.க.வின் வெற்றியை தமிழகம் முழுவதும் கட்சியினர் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியானது. நொடிக்கு, நொடி தேர்தல் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே த.வெ.க. முன்னிலை வகித்தது. நேரம் செல்ல, செல்ல த.வெ.க. வெற்றி உறுதி செய்யப்பட் டது.

இறுதியில் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. த.வெ.க.வின் வெற்றியை தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர். சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொண்டர்களுக்கும் அவர்கள் அயராத தேர்தல் பணிக்கும் என் நன்றி. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை ஏற்போம், நல்லாட்சி அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.