தேர்தல் 2026

தேமுதிகவில் இருந்து விலகிய மீசை ராஜேந்திரன் அதிமுகவில் இணைந்தார்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சென்னை,

தேமுதிகவில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும், விஜயகாந்தித்தின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மீசை ராஜேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்ட மீசை ராஜேந்திரனுக்கு இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில்தான், மீசை ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக கட்சியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.கேப்டன் மன்றத்தில் 31ஆண்டுகளும், தேமுதிகவில் 21 ஆண்டுகளும் உழைத்து இருப்பதாகவும் மீசை ராஜேந்திரன் கூறினார்.

தேமுதிகவில் இருந்து நடிகர் மீசை ராஜேந்திரன் விலகிய நிலையில், தற்போது அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தேர்தல் நெருங்கும் நிலையில் மீசை ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.