தேர்தல் 2026

தபால் வாக்கு செலுத்தினார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

விழுப்புரம்,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மூத்த குடிமக்கள் (85+) மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தைலாபுரம் இல்லத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (87). சட்டமன்ற தேர்தலுக்கான தனது வாக்கை தபால் மூலம் செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், “என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என சத்தியம் செய்திருந்தேன். குடும்ப நெருக்கடி காரணமாக அதை மீறி அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வந்து அமைச்சராக்கினேன். இந்தியாவிலேயே சிறு வயதில் ஒருவரை அமைச்சராக்கியது நான் தான்” என்று கூறினார்.

85 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் தபால் வாக்கை பெற்று வரும் தேர்தல் பணியாளர்கள் திண்டிவனம் தொகுதியில் அவரது தபால் வாக்கை பதிவு செய்தனர்.

இதனிடையே பா.ம.க. நிறுவனர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

SCROLL FOR NEXT