தேர்தல் 2026

திருவிக நகர் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டி

அதிமுக கூட்டணியில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.

கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. எஞ்சிய 167 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களின் மூன்றாம் கட்ட பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று வெளியிட்டார்.

அதில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் அவரது மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு திருவிக நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் திருவிக நகர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகிறார்.