சென்னை
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும், வேட்பாளர் தேர்வு, நட்சத்திர பேச்சாளர்கள் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. இதனிடையே பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க.வின் முதல் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்-அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா ஆகியோர் தலைமையிலான கூட்டணியில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில் நட்சத்திர தொகுதிகளான கொளத்தூர், பெரம்பூரில் மோதும் வேட்பாளர்கள் யார்.. யார்..? என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் சௌந்திர பாண்டியன் லூரர் சேத்தும், தவெக சார்பில் வி.எஸ்.பாபுவும் களமிறங்கி உள்ளனர்.
இதேபோல பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகரும், பாமக சார்பில் ஒரு வேட்பாளரும், தவெக சார்பில் விஜய்யும், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றித் தமிழனும் களமிறங்கி உள்ளனர்.
திமுக - உதயநிதி ஸ்டாலின்
அதிமுக - ஆதிராஜா ராம்
நாதக -ஆயிஷா
தவெக - செல்வம்
திமுக - இனிகோ இருதயராஜ்
அதிமுக - ராஜசேகரன்
நாதக -கிருஷ்ணசாமி
தவெக - விஜய்
திமுக - ராஜா அன்பழகன்
அதிமுக - சத்திய நாராயணன்
நாதக - அனுஷா விஜயகுமார்
தவெக - என். ஆனந்த்
திமுக - கார்த்திக் மோகன்
அதிமுக - விஜயகுமார்
நாதக - ரோஷினி
தவெக - ஆதவ் அர்ஜுனா
திமுக - ஈஸ்வரன்
அதிமுக - சந்திர சேகர்
நாதக - ரேவதி
தவெக - அருண்ராஜ்