தேர்தல் 2026

தமிழக அரசியலில் விஜயகாந்தை போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்திருந்தது.

மதுரை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நடிகர் விஜயகாந்த் முதன்முறையாக அரசியல் நுழையும் போது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தினாரோ? அதேபோன்று விஜய்யும் அதே அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவார் ஆனால், அந்தத் தாக்கம் ஆளுங்கட்சியாக திமுகவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். என்று கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்திருந்தது. அந்த தேர்தலில் கணிசமான அளவில் வாக்குவங்கியை பெற்றார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் விஜயகாந்த் தலைமையிலான தேதிமுக கூட்டணி வைத்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தோல்வி அடைந்து எதிர்கட்சி ஆகும் அந்தஸ்தையும் இழந்தது. அதனால், விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு விஜயை விஜயகாந்துடன் ஒப்பிட்டு திமுகவின் வாக்குவங்கிக்கு , மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பா.ஜ.க. வில் அண்ணாமலை போட்டியிடாததற்கு எந்த அழுத்தமும் இல்லை என நினைக்கிறேன். அவரது தொடர்பான யூகங்கள். வதந்திகள் பெரிதாக்கப்படுகிறது. அது முற்றிலும் பொய். வெளி நாட்டு பங்களிப்பு சட்டம் பற்றி அச்சம் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.