தேர்தல் 2026

'திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்' - பிரேமலதா விஜயகாந்த்

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது பற்றி யாரும் பேசுவதில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரை,

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;-

“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றி மட்டுமே பேசுகிறார்களே தவிர, தொகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. மக்கள் நன்றாக இருந்தால்தான் தொகுதி நன்றாக இருக்கும்.

எனவே நிச்சயமாக முருகன் அருளால் தீபமும் ஏற்றப்படும், இங்கே இருக்கின்ற மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். அதுமட்டுமல்ல கிருத்திகா தங்கபாண்டி திருப்பரங்குன்றம் மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவார்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT