தேர்தல் 2026

"தலைவன் இருக்கின்றான்" - தேர்தல் பிரசார பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.

அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசன் தேர்தல் பிரசார பாடலை வெளியிட்டுள்ளார். "தலைவன் இருக்கின்றான்" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.