விருதுநகர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தங்கம் தென்னரசை ஆதரித்து, கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
“தி.மு.க. அறிவித்த ‘8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்’ வாக்குறுதி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வினர் பிரிட்ஜ் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். வீட்டில் ஏற்கனவே ஒரு பிரிட்ஜ் இருந்தால், இன்னொரு பிரிட்ஜை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
அதனால்தான், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நான் 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் கொடுக்கிறேன். உங்கள் வீட்டில் பிரிட்ஜ், வாஷிங் மிஷின், கிரிண்டர் என எந்த பொருள் தேவைப்படுகிறதோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்’ என்று அறிவித்துள்ளார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.