தேர்தல் 2026

கடலூரில் நாளை நடைபெறுவதாக இருந்த விஜய் பிரசாரம் ரத்து

விஜய்யின் கடலூர் பிரசாரம் இருமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக ரத்தாகியுள்ளது.

கடலூரில் தவெக தலைவர் விஜய் நாளை மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலூரில் மஞ்சை நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள போலீசார் அனுமதி அளித்தனர். எனினும், ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

எற்கனவே விஜய்யின் கடலூர் பிரசாரம் இருமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக ரத்தாகியுள்ளது. இதனால் தவெகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விஜய் நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் 20 ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 21 ஆம் தேதி நந்தனத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.