கடலூர்,
கடலூரில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;
“மகளிர் இடஒதுக்கீடு மசோதா நகலை முதல்வராக இருந்து கொண்டு எரித்தது தேசத்துரோக செயல். இதற்கு தண்டனை வழங்க வேண்டும். இதனை பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் மனநிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தொகுதி மறுவரையால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் 50 சதவீதம் உயரும். ஸ்டாலின் தங்கை மட்டும் தான் எம்.பி ஆக வேண்டுமா? ஒடுக்கப்பட்ட பெண்கள் எம்பி ஆகக்கூடாதா? பெண்களுக்கு துரோகம் இழைத்து விட்டு பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார் ஸ்டாலின். மறுவரையறைக்கும் மக்கள் தொகைக்கும் சம்பந்தமில்லை.
திமுகவுக்கு திராவிட மாடல் மீது நம்பிக்கை இல்லை. 8000 ரூபாய் கூப்பன் மீது மட்டும் தான் நம்பிக்கை உள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என விஜய் கட்சி துவங்கினார். விஜயகாந்தும் அதே காரணம் தான். தற்போது பிரேமலதா, திமுகவில் இருந்து தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார்.
விஜய் ஆதரவாளர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். அந்த வாக்குகளை அதிமுக கூட்டணியான தங்களுக்கு அளியுங்கள். திமுக வீழ்த்தப்பட வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது நடக்கும். விஜய் வாக்குகள் பெறுவார். ஆனால் வெற்றி பெற முடியாது. திமுக அகற்றப்பட வேண்டும் என்றால் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் நிறைவேறும்.”
இவ்வாறு அவர் பேசினார்.