திருப்பூர்,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ரோடு ஷோ மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் ரோடு ஷோ மற்றும் பிரசாரத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு விடுமுறை நாளான நாளை (ஏப். 14) திருப்பூர் மாவட்டத்தில் விஜய்யின் ரோடு ஷோ மற்றும் பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை மாலை 4 மணியளவில் திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் பெருமாநல்லூரில் இருந்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை விஜய் ரோடு ஷோ செல்ல உள்ளார்.