தேர்தல் 2026

சைதாப்பேட்டையில் த.வெ.க. வெற்றி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தோல்வி

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது.

சென்னை,

234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை ) எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முடிவில் யார் அரியணையில் அமரப்போகிறார்கள் என்பது தெரியவரும். தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் 20 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சைதாப்பேட்டை தொகுதி தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் 28,344 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தோல்வி அடைந்துள்ளார்.

அருள் பிரகாசம் (த.வெ.க.) - 80,574 வாக்குகள்

மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) - 52,230 வாக்குகள்

செந்தமிழன் (அமமுக) - 17,703

ஸ்ரீவித்யா (நாதக) - 5,880