Trending

சென்னை-டெல்லி உள்பட 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் 4 வழிப்பாதையாக மாறுகிறது

கடந்த 10 ஆண்டுகளில் 36 ஆயிரம் கி.மீ. கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் நிலக்கரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரெயில் பாதைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலை நிரந்தர மாகத் தீர்க்கவும், ரெயில்கள் தாமதமாவதைத் தவிர்க்கவும் நாடுமுழுவதும் உள்ள 7 முக்கிய ரெயில் வழித்தடங்களை 4 வழிப் பாதைகளாக மாற்ற இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இது குறித்து ரெயில்வேதுறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது ரெயில் பாதை களில் கடும் நெரிசல் நிலவுகிறது. நிலக்கரி மற்றும் பிற சரக்குக ளின் போக்குவரத்து உச்சத்தில் உள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, கடந்த 10 ஆண்டுகளில் 36 ஆயிரம் கி.மீ. கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாதைகளை உருவாக்குவதும், ரெயில்வேயின் கொள்ளளவை அதிகரிப்பதும் மிக அவசியமாகும். தொடர்ந்து புதிய பாதைகளை அமைக்க வேண்டியது கட்டாயமாகும்" என்றார்.

மேலும் அவர், "டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கரச் சாலை வழித்தடங்கள் மற்றும் டெல்லி-சென்னை, மும்பை-கொல்கத்தா, டெல்லி-கவுகாத்தி ஆகிய முக்கிய குறுக்கு வழித்தடங்களை 4 வழிப்பாதைகளாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் புதிய திட்டங்களுக்கு அவ்வப்போது ஒப்புதல் அளித்து வருகிறார்.

இந்த 4 வழிப்பாதை பணிகள் நிறைவடைந்த பிறகு, கூடுதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்களை இயக்க முடியும். இது பயணிகளின் காத்திருப்புப் பட்டியல் மற்றும் முன்பதிவு தொடர்பான சிக்கல் களைக் கணிசமாகக் குறைக்கும். ரெயில்வேயின் கட்டமைப்பை விரிவுபடுத்துவதே எங்களின் தொடர் முயற்சியாகும்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT