அ.தி.மு.க.  
வீடியோ

அ.தி.மு.க. கை மாறியது எப்படி?

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க. கட்சி பிளவுபட்டது.

எம்.ஜி.ஆர். எனும் தனி மனிதர் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்தார். அவரை ஒரு கடவுள் போல் பார்த்தவர்களும் உண்டு. அ.தி.மு.க. எனும் கட்சியை எம்.ஜி.ஆர். தோற்றுவித்து, அதைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்ததோடு, முதல்-அமைச்சராக தனது கடைசிக்காலம் வரை பதவி வகித்து வந்தார்.

பிளவுபட்ட கட்சி

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க. கட்சி பிளவுபட்டது. கட்சியின் சின்னமான இரட்டை இலையை முடக்கும் அளவுக்கு அந்தப் பிரிவினை சென்றது. கட்சியைக் கைப்பற்ற ஒருபக்கம் இரண்டு தரப்பினர் இடையே போட்டி நடக்க... யார் பக்கம் சாய்வது என்று தொண்டர்கள் குழம்பி நிற்க... அந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி எம்.ஜி.ஆர். ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

அவர் எடுத்த நடவடிக்கை என்ன... அது அவரின் அரசியல் வாழ்க்கையை எந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியது, தொண்டர்கள் யார் பக்கம் இருந்தனர்... எம்.ஜி.ஆர். போன்று தேர்தல் வெற்றியை ஜானகியால் அடைய முடிந்ததா என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காண, கீழ்க்கண்ட யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்திடுங்கள்.

வீடியோ:- https://m.youtube.com/watch?v=EjOECZ5OxMc

SCROLL FOR NEXT