சினிமா நட்சத்திரங்களை உச்சாணிக்கொம்பில் வைத்து அழகு பார்க்கும் மண் தமிழ்நாடு. நடிகர்களை மட்டுமல்ல... நடிகைகளையும் வெகுவாகக் கொண்டாடும் ரசிகர்கள் இங்கு அதிகம். நடிகைக்கு கோவில் கட்டியதிலிருந்து கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தியது வரையிலான நிகழ்வுகள் அரங்கேறியதை வைத்தே அதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில், நடிகை திரிஷா பெயரில் 'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' என்ற புதிய அமைப்பு திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது. ராஜகோபால் என்பர் இந்த அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்.
மாநில, தேசியக் கட்சிகளில் மாறி மாறி பொறுப்பில் இருந்து வந்த அவர் ஏன் திடீரென நடிகை திரிஷாவுக்கு புதிய அமைப்பு தொடங்கி உள்ளார்? ஒருவேளை திரிஷாவிடம் இருந்து இதுதொடர்பாக சிக்னல் எதுவும் வந்ததா? அல்லது பேரவைத் தொடக்கத்தின் பின்னணியில் வேறு காரணம் உள்ளனவா?
திரிஷா அரசியலில் குதிக்க ஆர்வமாக உள்ளாரா? ஏற்கெனவே உள்ள கட்சியுடன் பயணிப்பாரா அல்லது தனிப்பாதையில் செல்வாரா என்பன போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கான விடை அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்கை கிளிக் செய்து பார்த்திடுங்கள்.
வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?app=desktop&v=8R51pz7MEB8