மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து கடுமையான விவாதங்களை முன் வைத்தபோதும், த.வெ.க.அரசு மவுனம் காத்து வந்தது.
உண்மையிலேயே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதா, அது குறித்து கலெக்டர் புகார் செய்திருந்தாரா என்ற பல்வேறு சந்தேகங்கள் மக்களிடையே நிலவியது. இந்த நிலையில், ஆபாச குறுஞ்செய்தி பிரச்சினை வெளிவந்து, நீண்ட நாட்களுக்குப் பின்னர் அருள் விக்னேஷ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது.
கலெக்டர் புகார் கொடுத்தும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காவல்துறை மெத்தனமாக இருந்தது ஏன், அரசின் நீண்ட நாள் மவுனத்திற்கு என்ன காரணம் எனப் பல்வேறு சந்தேகங்கள் உண்டானது. இந்த சம்பவம் குறித்த தற்போதைய தகவலை அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் லிங்க்கைக் கிளிக் செய்திடுங்கள்.