ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் உண்ணும் உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியது
அவசியம். குறிப்பாக சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.
சுற்றுச்சூழல் மோசமானால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. சுற்றுச்சூழலில் முதலில் காற்று சுத்தமாக - சுகாதாரமாக இருக்க வேண்டும். காற்றின் தரம் குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லி மாளாது.
காற்றின் தரம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒருவரின் பணித் திறனையும் இந்தக் காற்றின் தரம் பாதித்துவிடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்... அதுதான் நிஜம். சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருந்தால்தான் பணித் திறன் மேம்படும்.
காற்றின் தரம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும், காற்றின் மோசமான தரம் வேறு என்னென்ன சிக்கல்களை உருவாக்கும் என்பதை முழுமையாக அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்து பார்த்திடுங்கள்.