வீடியோ

மரணபயம் காட்டும் சென்டினல் தீவு!

சென்டினல் தீவு மக்களை நாகரிக உலகுக்குக் கொண்டு வருவதற்காக இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது.

அந்தமான் தீவுக் கூட்டங்களில் ஒன்று வடக்கு சென்டினல் தீவு. வெளி உலக மக்களின் தொடர்பு இல்லாமல் முற்றிலும் தனித்தே வாழ்ந்து வரும் ஒரு மக்கள் கூட்டம் இங்கு வசித்து வருகிறது. ஆதி காலத்தில் மனிதர்கள் காடுகளில் ஆடைகளின்றி வாழ்ந்து வந்தனர் என்று வரலாறு கூறுகிறது. அதன்பின் நாகரிகம் உருவாகி தற்போது நவீன காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால், எந்தவித நாகரிகமும் ஏற்படாமல் ஆதிகால மனித வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்கள் சென்டினல் தீவு மக்கள்.

ஆபத்து

இவர்களை நாகரிக உலகுக்குக் கொண்டு வருவதற்காக இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அது முடியவில்லை. இந்தத் தீவின் அருகில் யார் சென்றாலும் அவர்களை எதிரிகளாகப் பாவித்து கொல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் அந்தத் தீவு மக்கள்.

இந்தத் தீவில் எத்தனை மக்கள் வாழ்கிறார்கள் என்ற விவரம் கூட அரசிடம் இல்லை. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது துணிச்சலாக ஒரு முடிவை எடுத்துள்ளது. அது என்ன முடிவு, ஆபத்தையும் பொருட்படுத்தாமல் எதற்காக அந்த முடிவில் அரசு தீவிரம் செலுத்தி வருகிறது, சென்டினல் தீவில் வாழும் மக்களின் வரலாறு என்ன என்பது போன்ற விவரங்களை அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்திடுங்கள்.

வீடியோ லிங்க: https://www.youtube.com/watch?v=aXhCiHxnTzw

SCROLL FOR NEXT