வீடியோ

6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், கொளத்தூர் ஆகிய தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.

ஸ்டாலின் போட்டியா?

இந்த 6 தொகுதிகளுக்கும் எப்போது இடைத் தேர்தல் நடக்கப் போகிறது, எந்தெந்த கட்சிகள் களம் காணப்போகின்றன, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா என்கிற அடுக்கடுக்கான கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.

உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இவற்றோடு தமிழ்நாட்டின் 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காண,கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கை கிளிக் செய்திடுங்கள்.

வீடியோ - https://www.youtube.com/watch?v=v6msWInw-58

SCROLL FOR NEXT