சினிமா துளிகள்

‘வாசுவின் கர்ப்பிணிகள்’ விஜய் பட தயாரிப்பாளரின் அடுத்த படம்

சேவியர் பிரிட்டோ. இவர் தற்போது, ‘அழகிய கண்ணே’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து இவர் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்.

தினத்தந்தி

விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்தவர், சேவியர் பிரிட்டோ. இவர் தற்போது, அழகிய கண்ணே என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து இவர் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, வாசுவின் கர்ப்பிணிகள் என்று பெயர் சூட்டியிருக்கிறார். பென்சில் படத்தை இயக்கிய மணி நாகராஜ் டைரக்டு செய்கிறார்.

கதையம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் படம், இது. ஒரு மருத்துவர் தனது வாழ்க்கையில் சந்திக்கும் வினோதமான 4 கர்ப்பிணிகளை பற்றிய கதை. மருத்துவராக கோபிநாத் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் அபிஷேக், அனிகா, சீதா, வனிதா விஜயகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன. படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்