சந்திராப்பூர்,
சந்திராப்பூர் டோர்காவ் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஜெய்பாய் (வயது55) என்ற பெண் நேற்று வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது புதர்களில் பதுங்கி இருந்த புலி ஒன்று பெண் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரை தேடி உறவினர்கள் வந்தபோது புலி தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக வனத்துறை அதிகாரி பிரகாஷ் லோன்கர் தெரிவித்தார்.