தலைப்புச் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்

டியூசன் ஆசிரியர் அமித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மும்பை,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமித். இவர் மராட்டிய மாநிலம் லதூர் மாவட்டத்தில் உள்ள டியூசன் சென்டரில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அமித்திற்கு கடந்த சில மாதங்களுக்குமுன் இன்ஸ்டாகிரம் மூலம் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை நேரில் சந்தித்தபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிக்கு தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

டியூசன் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கடந்த புதன்கிழமை பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டியூசன் ஆசிரியர் அமித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT