அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது டிட்வா புயல்: நகரும் வேகம் குறைந்தது
கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீட்டர் வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நிலவியது. இந்த புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் காலையில் நகர்ந்து வந்தது. நேரம் செல்ல செல்ல புயலின் நகரும் வேகம் குறைந்தது.
தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில், டிட்வா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீட்டர் வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.