2025ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய திரைப்படங்கள்

2025-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.;

Update:2026-01-01 08:18 IST

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் பல்வேறு துறைகளில் அதிகம் தேடப்பட்டவைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2025-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய திரைபடங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அது என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

1) சையாரா

அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடித்த இந்தப் படம் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் காதல் கதை. இந்த ஆண்டின் பீல் குட் படமாகவும், ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த படம்தான் 2025ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2) காந்தாரா 2

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா 2’ படத்தில் ருக்மினி வசந்த் நாயகியாக நடித்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

3) கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் கூலி. இந்த படம் ரசிகர்களால் அதிகம் கூகுளில் தேடப்பட்ட படங்களில் வரிசையில் 3-வது இடம் பிடித்துள்ளது. இந்த படத்தில் அமீர்கான், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

4) வார் 2

ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான வார் 2 படம் 4வது இடத்தை பிடித்துள்ளது. இதில் நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்திருந்தார். அயன் முகர்ஜி இயக்கத்தில் பெரிய எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

5) சனம் தேரி கசம்

காதல் கதையை அடிப்படையாக கொண்டு 2016ம் ஆண்டு வெளியான கிளாசிக் படம் தான் சனம் தேரி கசம். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் ரீ ரிலீஸ் ஆன நிலையில், அனைவரது கவனத்தையும் பெற்று மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இப்படம் 2025ல் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

6) மார்கோ

உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான ஆக்சன் படம் மார்கோ. இந்த படம் 2024ல் வெளியாகி இருந்தாலும், 2025ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களில் 6வது இடத்தை பிடித்துள்ளது.

7) ஹவுஸ் புல் 5

அக்சய் குமார் - இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் உருவான நகைச்சுவைத் திரைப்படம் "ஹவுஸ் புல் 5". சஜித் நதியாத்வாலா தயாரித்த இந்தப் படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பாஜ்வா, நர்கிஸ் பக்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 7வது இடத்தினை பெற்றுள்ளது.

8) கேம் சேஞ்சர்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம்சேஞ்சர் படம் இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.

9) மிஸஸ்

மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இந்தி ரீமேக் தான் இந்தப் படம். இதில் சான்யா மல்ஹோத்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பட்டியலில் இப்படம் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

10) மகாவதார் நரசிம்மா

அஸ்வின் குமார் இயக்கத்தில் உருவான அனிமேஷன் திரைப்படம் ‘மஹாவதார் நரசிம்ஹா’. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய இந்த படம் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்