

அறிவியல் உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடக்கிறது. தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்வது அதிகரித்து வருகிறது. ஏமாற்றப்பட்டவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன.
இதுபோல் 3 பெண்களுக்கு துரோகம் நடக்கிறது. அந்த துரோகம் அவர்களை எப்படி பாதிக்கிறது? என்பதே கதை.
ஜோயல் விஜய் இயக்குகிறார். முத்துலட்சுமி ராஜராஜன் தயாரிக் கிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகன் கிடையாது. கதைநாயகிகளாக ரேஷ்மா வெங்கட், சாயாதேவி, கன்னிகா ரவி ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது.