முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து கல்லூரி மாணவியை கற்பழித்த கும்பலுக்கு வலைவீச்சு - புனேயில் பயங்கரம்

புனேயில் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து கல்லூரி மாணவியை கடத்தி சென்று கற்பழித்த கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து கல்லூரி மாணவியை கற்பழித்த கும்பலுக்கு வலைவீச்சு - புனேயில் பயங்கரம்
Published on

புனே,

புனே நிகிடியை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரது முகத்தில் மயக்க மருந்து கலந்த ஸ்பிரே அடித்தனர். இதை சுவாசித்த மாணவி அங்கேயே மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அந்த கும்பலினர், மாணவியை அங்கு தயார் நிலையில் நின்ற ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். மறைவான இடத்திற்கு சென்றபின் மாணவியை அவர்கள் கற்பழித்தனர்.

இதன் பின்னர் நடைபாதையில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மயக்கம் தெளிந்த பின்னர், தான் கற்பழிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால் செய்வதறியாமல் திகைத்த மாணவி சாலை ஒரமாக நின்று அழுது கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரிடம் சென்று விசாரித்னர். இதில் மேற்கொண்ட சம்பவம் தெரியவந்தது.

இது தொடர்பாக நிகிடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரிக்கு சென்ற மாணவியை கும்பல் கடத்தி கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com