மூட்டு வலியுடன் நடனமாடிய அஞ்சலி

தெலுங்கு படத்தின் பாடல் காட்சியை படமாக்கியபோது அஞ்சலிக்கு கடும் மூட்டு வலி இருந்தது. அதிக வலி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அஞ்சலி நடனம் ஆடியதை பார்த்து ஆச்சரியப்பட்டதாக படத்தின் நாயகன் நிதின் தெரிவித்து உள்ளார்.
மூட்டு வலியுடன் நடனமாடிய அஞ்சலி
Published on

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலிக்கு இப்போது படங்கள் குறைந்துள்ளது. இதனால் மற்ற நடிகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். ஏற்கனவே சூர்யாவின் சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தெலுங்கிலும் பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார். தற்போது மச்சேர்லா நியோஜகவர்கம் என்ற தெலுங்கு படத்திலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆட அஞ்சலியை ஒப்பந்தம் செய்தனர். சமீபத்தில் அஞ்சலி ஆடிய கவர்ச்சி நடன காட்சியை படமாக்கி முடித்தனர்.

 இதில் அஞ்சலி மூட்டு வலியுடன் நடனம் ஆடி இருக்கிறார். இந்த தகவலை படத்தின் நாயகன் நிதின் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ''மச்சேர்லா நியோஜகவர்கம் படத்தின் பாடல் காட்சியை படமாக்கியபோது அஞ்சலிக்கு கடும் மூட்டு வலி இருந்தது. அதிக வலி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அஞ்சலி நடனம் ஆடியதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். முதல் தடவையாக அஞ்சலியுடன் இணைந்து ஆடி இருக்கிறேன். இந்த பாடல் பெரிய வரவேற்பை பெறும்" என்றார். அஞ்சலி கூறும்போது, ''இது எனக்கு முக்கிய பாடல். நிதின் வேகமாக ஆடக்கூடியவர். அவருடன் ஆடுவது கஷ்டமாக இருந்தது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com