தீவிர பயிற்சியில் அனுஷ்கா சர்மா.. வியக்கும் ரசிகர்கள்

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அனுஷ்கா ஷர்மா தீவிர பயிற்சியில் ஈடுப்படும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தீவிர பயிற்சியில் அனுஷ்கா சர்மா.. வியக்கும் ரசிகர்கள்
Published on

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி. இவர் இந்திய அணியை 2008-ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டுவரை வழி நடத்தினார். இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய இவருக்கு விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு தயாராகும் விதமாக அனுஷ்கா சர்மா மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா இன்று பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com