எம்.டெக், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுவையில் எம்.டெக், எம்.பி.ஏ. படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.டெக், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on

புதுச்சேரி

புதுவையில் எம்.டெக், எம்.பி.ஏ. படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எம்.டெக், எம்.பி.ஏ

புதுவையில் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை இல்லாத முதுநிலை படிப்புகளான எம்.டெக், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. எம்.எஸ்சி. மெட்டீரியல் சயின்ஸ், எல்.எல்.பி., எல்.எல்.எம்., மற்றும் டிப்ளமோ சட்ட படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற இணையளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 15-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். முதுநிலை தெழில் படிப்புகளில் பிற மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.500 ஆகும். பிற மாநில மாணவர்களுக்கு ரூ.1,500 , எஸ்.சி, எஸ்.டி. மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பிரிவு

விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் விளையாட்டு சான்றிதழ் நகல்களுடன் கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com