

நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடித்து, கோபி நயினார் டைரக்ஷனில், சமீபத்தில் திரைக்கு வந்த அறம் படம் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, அறம் படத்தின் 2ம் பாகத்தை கொண்டு வரலாமா? என்று டைரக்டர் கோபி நயினார் ஆலோசித்து வருகிறாராம்.
இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு படக்குழுவினர் திரையிட்டு காண்பித்தார்கள். படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், சமூகத்துக்கு மிகவும் தேவையான படம் என்று கூறியதுடன், கதாநாயகி நயன்தாரா, டைரக்டர் கோபி நயினார் ஆகிய இருவரையும் பாராட்டினார்!