அர்ஜூன்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படம்

அர்ஜூன்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படம்
Published on

அர்ஜூன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முதல் முறையாக இணைந்து `தீயவர் குலைகள் நடுங்க' என்ற படத்தில் நடித்துள்ளனர். தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ள இந்த படத்தில் அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல ராமமூர்த்தி, தங்கதுரை, ராகுல், ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

படம் பற்றி இயக்குனர் தினேஷ் லட்சுமணன் கூறும்போது, ``கிரைம் - திரில்லர் கதையம்சத்தில் படம் தயாராகி உள்ளது. கொடூரமான முறையில் நிகழும் ஒரு கொலையையும், அதன் பின்னணியில் இருக்கும் பல மர்மங்களையும் கொண்டதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேசும், துப்புதுலக்கும் அதிகாரியாக அர்ஜூனும் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும்'', என்றார்.ஜி.அருள்குமார் தயாரித்துள்ளார். இசை- பரத் ஆசிவகன். ஒளிப்பதிவு. சரவணன் அபிமன்யு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com