வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பல் ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்

வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பலானது. இந்த தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பல் ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு, மெயின்ரோட்டில் வசிப்பவர் முருகையன் (வயது60). இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் மனோகரன் (55). இந்த நிலையில் நேற்று மதியம் முருகையன் வீட்டில் சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக கூரையில் தீப்பிடித்தது. இந்த தீ மனோகரன் வீட்டுக்கும் பரவியது. இதில் 2 வீடுகளிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் 2 வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 2 பேருக்கும் அரசின் நிவாரண உதவிகளை தாசில்தார் சங்கர் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com