பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Published on

போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தத்தை மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதிய உயர்வு அடிப்படையில் உடனடியாக அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த 11 சதவீத டி.ஏ.வை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் கே.பூபதி கலந்துகொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் தனசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் முருகேஷ், பொருளாளர் லிங்கேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com