சென்னையில் 1,647 மையங்களில் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

சென்னையில் 1,647 மையங்களில் 6.68 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் 1,647 மையங்களில் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் நாளை (27-ந்தேதி) நடைபெறவுள்ளது. இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1,647 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் 27-ந்தேதி நடைபெறும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாமில் குழந்தைகளுக்கு அவசியம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். இது ஒரு கூடுதல் தவணையாகும். இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரெயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு கூட்டம்

இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com