சாராயம் விற்றவர் கைது

மணல்மேடு அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சாராயம் விற்றவர் கைது
Published on

மணல்மேடு:-

மணல்மேடு அருக உள்ள மண்ணிப்பள்ளம் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ்மணிகண்டன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் மண்ணிப்பள்ளம் பொட்டவெளி தெருவை சேர்ந்த அருண்மொழி (வயது38) என்பதும், அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக பேலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com