அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டி பகுதியில் அரும்பாவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலையாளப்பட்டி அருகே கையில் நாட்டு துப்பாக்கியுடன் நின்றவரை பிடித்து விசாரித்தபோது அவர் ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேட்டை மணி என்ற மணிகண்டன் (வயது 23) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com