இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

ராமநாதபுரம்,

அரியலூர் மாவட்ட பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை சம்பவத்திற்கு நீதி வழங்க வேண்டும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பாக ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜ.க.தலைவர் முரளி தரன், இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் சக்திவேல் வீரபாண்டியன், பா.ஜ.க. மாவட்ட பொது செயலாளர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பாரதிராஜா மற்றும் இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், ஊடகபிரிவு தலைவர் குமரன், நகர் செயலாளர் வீரபாகு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com