அருவா

தீபாவளி விருந்தாக சூர்யா-ஹரி இணையும் 6-வது படம், `அருவா’ முன்னோட்டம் பார்க்கலாம்.
அருவா
Published on

சூர்யா இதுவரை 38 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 39-வது படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். படத்துக்கு, `அருவா என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஹரி டைரக்டு செய்கிறார். சூர்யா-ஹரி இணைந்து பணிபுரியும் 6-வது படம், இது. ஹரி இயக்கும் 16-வது படம்.

டி.இமான் இசையமைக்கிறார். சூர்யாவுடனும், ஹரியுடனும் இவர், முதல் முறையாக இணைகிறார்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்கி, ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடையும். வருகிற தீபாவளி விருந்தாக படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக் கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com