

அந்த படத்திலும் அதே போலீஸ் அதிகாரி வேடத்தில் ஆசா சரத் நடித்து இருந்தார். நடுத்தர வயதுள்ள பெண் கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டப்படுபவர்கள் வெகு சிலரே. இந்த பட்டியலில் ஆசா சரத்தும் சேர்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
தமிழ் படஉலகில் என் நடிப்புக்கு கிடைத்து வரும் பாராட்டுக்கள் மகிழ்ச்சியை தருகிறது. திரிஷ்யம் படம் என் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமைந்தது. அதில் என் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. தொடர்ந்து இதுபோன்ற நடுத்தர வயதுள்ள வேடங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார், ஆசா சரத்.