ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

புதுவையில் ஓட்டல் ஊழியரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்
Published on

புதுச்சேரி

ராமநாதபுரம் மாவட்டம் நைனார்குளம் பகுதியை சேர்ந்தவர் கங்குலி (வயது 24). புதுவை புதிய பஸ்நிலைத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஓட்டலில் சாப்பிட வந்த ஒருவருக்கு சாம்பார் ஊற்ற சென்றுள்ளார். அப்போது போகிற வழியில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை கங்குலி வழியை விட்டு தள்ளி நிற்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் எங்களையே தள்ளி நிற்க சொல்கிறாயா? என்று கூறி கங்குலியை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கங்குலியை தாக்கியது தேங்காய்திட்டை சேர்ந்த செந்தில், அவரது மகன் ஹரி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com